2015 ஏப்ரல் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-04-10 |
கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
யாழ்ப்பாணம், சுன்னாகம் மின் நிலையத்தை சூழவுள்ள பிரதேசத்தில் நிலத்தடி நீரானது கழிவு எண்ணெயின் பரவுகையினால் மாசுபட்டுள்ளமை தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் விடயமாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது:-
தொழில் சந்தைக்குத் தேவையான ஊழியர்களை பயிற்றுவித்தல்
எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகளுக்குத் தேவையான ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் வழியொன்றைத் தொடங்கி வைக்கும் பணியை மிகவும் வினைத்திறனான வகையில், நாட்டினுள் காணப்படும் அனைத்து மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களினூடாக ஆரம்பித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.
சபையில் பிரேரிக்கப்பட்ட (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 117 முதல் 119 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் இரண்டாம் மதிப்பீட்டு சட்டமூலங்கள் (சட்டவாக்க) நிலையியற்குழு “பி” க்கு ஆற்றுப்படுத்தப்பட்டன:-
(i) அல் ஜாமியாத்துல் கவ்ஸிய்யா (கூட்டிணைத்தல்)
(ii) சம்பிக பிரேமதாச சமுதாய அபிவிருத்தி மன்றம்
(iii) இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சம்மேளனம்
அதனையடுத்து, 1510 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஏப்ரல் 20ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






