2015 ஏப்ரல் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-04-09 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-
‘A’ : "அரசியலமைப்பின் பத்தொன்பதாம் திருத்தம்" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011/2012 ஆம் ஆண்டுக்கான லங்கா லொஜிஸ்ரிக்ஸ் அன்ட் ரெக்னொலொஜிஸ் லிமிரெட்
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான சீதுவை விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iv) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2014
(v) 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் நிதி மற்றும் தொழில் தொடர்புகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 மாச்சு 17 ஆம் திகதிய 1906/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரிற்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ பி. ஹரிசன்
(ii) கெளரவ அநுர திசாநாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
முன்னாள் ரஷ்ய தூதுவர் திரு உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பானது
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ ராஜீவ விஜேசிங்க அவர்களுக்கு “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான” இரு சட்டமூலங்களை வெவ்வேறாக சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1520 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஏப்ரல் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






