இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஏப்ரல் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-04-08

கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கெளரவ டக்ளஸ் தேவானந்தா                   
(ii) கெளரவ விஜித ஹேரத்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலை இரத்துச் செய்தல் மற்றும் இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவினை  நியமித்தல் தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

1997 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க, தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரசபைச் சட்டத்தை நீக்குவதற்கும் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரசபை (நீக்கல்)

எனும் சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வாகனங்களுக்கான வரிச்சலுகை” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1810 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஏப்ரல் 09ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom