இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஏப்ரல் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-04-07

கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-

‘A’  : அரசியலமைப்பின் 121(1) ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள்

‘B’  : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் கௌரவ சபாநாயகர் அவர்களால் சான்றுரை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான வரையறுத்த இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை கைப்பணிகள் சபை
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனி லிமிடெட்
(v) 2011 ஆம் ஆண்டுக்கான கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபை
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழு
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம்
(viii) 2012 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகம்
(ix) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனம்
(x) 2012 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானங்கள்

(xi) 2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xii) 2015 பெப்புருவரி 26 ஆந் திகதிய 1903/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

(xiii) 2014 திசெம்பர் 02 ஆந் திகதிய 1891/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xiv) 2014 திசெம்பர் 12 ஆந் திகதிய 1892/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xv) 2014 திசெம்பர் 31 ஆந் திகதிய 1895/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

(xvi) 2015 சனவரி 22 ஆந் திகதிய 1898/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xvii) 2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xviii) 2015 பெப்புருவரி 14 ஆந் திகதிய 1901/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xix) 2015 பெப்புருவரி 24 ஆந் திகதிய 1903/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xx) 2015 மாச்சு 17 ஆந் திகதிய 1906/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

(xxi) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்புருவரி 26 ஆம் திகதிய 1903/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

(xxii) 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட  குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2014


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

கெளரவ எம்.ரீ. ஹஸன் அலி - நான்கு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றினை விடுத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கெளரவ நிதி அமைச்சர்அவர்கள் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-

(i) உண்ணாட்டரசிறை (திருத்தம்) - 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(ii) சேர்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சேர் பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(iii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நாட்டைக் கட்டியெழுப்புதல் வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(iv) நிதி - மதுச்சாலைகள் மற்றும் தவறணைகள் அறவீடு, சீட்டாட்டத் தொழில் அறவீடு, அதிஈட்ட வரி, செல்லிடத் தொலைபேசி தொழிற்படுத்துநர் அறவீடு, வீட்டுக்கு நேரடி செய்மதிச் சேவைகள் அறவீடு, செய்மதி அமைவிட அறவீடு, அர்ப்பணிக்கப்பட்ட விளையாட்டு அலைவரிசை அறவீடு, மாளிகை வரி, குடியகல்வு வரி அத்துடன் மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் உரிமக்கட்டணைத்தை விதிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட மற்றும் அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானது.

(v) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)  - 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(vi) தொலைத்தொடர்பு அறவீட்டுத் (திருத்தம்) - 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, தொலைத்தொடர்பு அறவீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(vii) பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தம்) - 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, பந்தய, சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 31; எதிராக 52) சபையினால் நிராகரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஏப்ரல் 08ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom