2015 மார்ச் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-03-24 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா
(ii) கெளரவ சுசந்த புஞ்சிநிலமே
(iii) கௌரவ அஜித் மான்னப்பெரும
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைந்த கௌரவ லீ குவான் யூ அவர்கள் மீதான அனுதாபங்கள்
கௌரவ ரணில் விக்கிரமசிங்க,
(பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும்)
கௌரவ நிமல் சிறிபால த சில்வா,
(பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்)
கௌரவ சமல் ராஜபக்ஷ,
(பாராளுமன்ற சபாநாயகர்)
ஆகியோர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைந்த கௌரவ லீ குவான் யூ அவர்கள் மீது தங்களது அனுதாபங்களை வெளியிட்டனர்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்காக
அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தம்
எனும் சட்டமூலத்தினை கெளரவ பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமானவர் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை துன்புறுத்தல் மற்றும் பொலிஸ் திணைக்கள அண்மைக்கால இடமாற்றங்கள்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை நிமல் சிறிபால த சில்வா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1750 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஏப்ரல் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






