2015 மார்ச் 04ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-03-04 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-
‘A’ : சட்டமூலங்களின் சான்றுரை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனம்(ii) 2013/2014 ஆம் ஆண்டுக்கான சிறிலங்கன் எயார்லையின்ஸ்
(iii) 2012 ஆம் ஆண்டுக்கான புனர்வாழ்வு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றும்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ கருப்பையா வேலாயுதம் - பதின்மூன்று மனுக்கள்
(ii) கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
ஆலோசனைக் குழுக்கள்
கீழ்க்கண்டவாறு முப்பத்தொரு (31) ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுமாக,
1. பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக்குழு
2. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பற்றிய ஆலோசனைக்குழு
3. கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
4. மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமை மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
5. உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் பற்றிய ஆலோசனைக்குழு
6. உணவுப் பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக்குழு
7. வெளிநாட்டலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
8. அரசாங்க நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய ஆலோசனைக்குழு
9. புத்தசாசனம் பற்றிய ஆலோசனைக்குழு
10. பெருந்தோட்டக் கைத்தொழில்கள் பற்றிய ஆலோசனைக்குழு
11. நிதி பற்றிய ஆலோசனைக்குழு
12. நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பற்றிய ஆலோசனைக்குழு
13. மின்வலு, எரிசக்தி பற்றிய ஆலோசனைக்குழு
14. சுகாதார மற்றும் சுதேச மருத்துவ பற்றிய ஆலோசனைக்குழு
15. நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் பற்றிய ஆலோசனைக்குழு
16. நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய ஆலோசனைக்குழு
17. காணி பற்றிய ஆலோசனைக்குழு
18. வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பற்றிய ஆலோசனைக்குழு
19. நீதி மற்றும் தொழில் உறவுகள் பற்றிய ஆலோசனைக்குழு
20. வெகுசன ஊடக, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
21. சுற்றுலா மற்றும் விளையாட்டுதுறை பற்றிய ஆலோசனைக்குழு
22. துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச் சேவைகள் பற்றிய ஆலோசனைக்குழு
23. கைத்தொழில், வாணிப அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
24. தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு
25. மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
26. கல்வி பற்றிய ஆலோசனைக்குழு
27. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பற்றிய ஆலோசனைக்குழு
28. உள்ளகப் போக்குவரத்து பற்றிய ஆலோசனைக்குழு
29. சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக்குழு
30. மகளிர் அலுவல்கள் பற்றிய ஆலோசனைக்குழு
31. முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் பற்றிய ஆலோசனைக்குழு
109 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்து அறிக்கையிடும் பொருட்டு ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் ஐந்து (5) பேருக்குக் குறையாததும் இருபத்தைந்து (25) பேருக்கு விஞ்சாததுமான உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.
ஒவ்வோர் ஆலோசனைக் குழுவும் கூட்டநடப்பெண்ணாக மூன்று (3) உறுப்பினர் களைக் கொண்டிருக்குமாக.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ டாக்டர் (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்களுக்கு “ரவிச்சந்திர அமைப்பு (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
சபையினால் நிறைவேற்றப்பட்டதுடன் சட்டமூலத்தின் குழுநிலையானது 2015 மார்ச் 06ஆம் திகதி, வெள்ளிக்கிழமை வரை பிற்போடப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“முன்னைய அரசாங்கத்தினால் பொதுநிதி துஷ்பிரயோகம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் மானப்பெரும அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 06ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






