2015 மார்ச் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-03-03 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-
‘A’ : தெரிகுழுவின் கூட்டம்
‘B’ : பாராளுமன்ற உறுப்பினர்களின் கைது தொடர்பான தீர்ப்பு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்ட செயலகம்
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் திணைக்களம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான பொல்கொல்ல தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கணக்கியல் மற்றும் கணக்காய்வு நியமங்களின் கண்காணிப்புச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
"மடஹபொல ஸ்ரீ ரத்னபாலராம விகாரையின் பௌத்த கல்வி அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தின் “ஏ” நிலையியற் குழு அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கெளரவ சந்திம வீரக்கொடி - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ பாலித ரங்கே பண்டார
(iii) கெளரவ அஜித் பி. பெரேரா
(iv) கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க
(v) கெளரவ விக்டர் அந்தனீ
(vi) கெளரவ புத்திக பதிரண
(vii) கெளரவ அஜித் மான்னப்பெரும
(viii) கௌரவ கருப்பையா வேலாயுதம் - பதினைந்து மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்
CIFL (PLC) வங்கி மூடுதல் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
(ii) கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்கள்
சுவிச்சர்லாந்து HSBC வங்கியில் சில இலங்கையர்கள் நடத்திய கணக்குகள் தொடர்பான கோப்புகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
தேசிய மருந்துகள் கொள்கைக்கு ஒத்ததாகவுள்ள முறையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் எல்லைக்கோட்டு உற்பத்திப் பொருட்கள் மற்றும் மருத்துவகப் பரீட்சிப்புகளை நடாத்துதல் தொடர்பான பதிவையும், உரிமமளித்தலையும், உற்பத்தியையும், இறக்குமதியையும் மற்றும் வேறெல்லா அம்சங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பாகவிருக்க வேண்டியதான, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை எனவறியப்பட வேண்டியதுமான ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையொன்றைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; மருந்துகள் ஒழுங்குபடுத்தும் பிரிவு, மருத்துவ உபகரணங்கள் ஒழுங்குபடுத்தும் பிரிவு, எல்லைக்கோட்டு உற்பத்திப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் பிரிவு மற்றும் மருத்துவகப் பரீட்சிப்புகள் ஒழுங்குபடுத்துதல் பிரிவு உட்படத் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் பிரிவுகளை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; தேசிய மதியுரைக் குழுவொன்றைத் தாபிப்பதற்கும்; 1980 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க ஒப்பனைச் சாதனங்கள், உபாயங்கள், அவுடதங்கள் சட்டத்தை நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை
எனும் சட்டமூலத்தினை கெளரவ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“1000 பாடசாலைகள் திட்டங்களின் கீழ் மகிந்தோதய ஆய்வுகூடம் மற்றும் மகிந்தோதய தொழில்நுட்ப கல்லூரி” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ வை.ஜீ. பத்மசிரி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1932 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 04ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






