2015 பெப்ரவரி 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-02-19 |
கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2012 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ கருப்பையா வேலாயுதம் - பதினைந்து மனுக்கள்
(ii) கெளரவ எரிக் பிரசன்ன வீரவர்தன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கையை காலதாமதப்படுத்தல்’ சம்பந்தமான நிலையியற் கட்டளை 23(2) கீழ் கூற்றொன்றை விடுத்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ நலின் பண்டார ஜயமஹ அவர்களுக்கு “சுஜீவ சேனசிங்க மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள், நலன்புரி மற்றும் கால்நடைவளர்ப்பு அபிவிருத்தி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டமூலம்
சபையினால் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1847 மணியளவில் பாராளுமன்றம் 2015 பெப்ரவரி 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






