இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 பெப்ரவரி 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-02-18

கௌரவ சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் 4 அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.-

(i) ‘A’  : “தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் மற்றும் மதுசாரம்   அதிகாரசபை” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

‘B’, ‘C’ மற்றும் ‘D’  : சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக கேள்வி எழுப்பியோர்
(ii) கௌரவ ரவி கருணாநாயக்க
(iii) கௌரவ ஆர். யோகராஜன்
(iv) கௌரவ நலின் பண்டாற ஜயமஹ


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2011 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபை
(ii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
(iii) 2011 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா அரச பொறியியற் கூட்டுத்தாபனம்
(iv) 2011 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனம்
(v) 2012 ஆம் ஆண்டுக்கான நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை
(vi) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vii) 2013 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்ட செயலகம்
(ix) 2013 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகம்
(x) 2012 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேதத் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ கருப்பையா வேலாயுதம் - பதினைந்து மனுக்கள்
(ii) கெளரவ ஏ. டி. சம்பிக பிரேமதாச                   
(iii) கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா - இரண்டு மனுக்கள்
(iv) கெளரவ சஜின் த வாஸ் குணவர்தன - இரண்டு மனுக்கள்
(v) கெளரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க                   
(vi) கெளரவ செஹான் சேமசிங்க                   
(vii) கௌரவ அஜித் மான்னப்பெரும

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


நிலையியற் கட்டளை 23(2)  இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள்

கிராமிய மட்டத்தில் அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பாக அரசின் நிலைப்பாடு

(ii) கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள்

தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர்களின் நியமனங்கள் தொடர்பானது


சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பெசில் ரோஹண ராஜபக்ஷ அவர்கள்  சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதி கோரும் பிரேரணையை கெளரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பிரேரித்ததுடன், அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம்

சபையினால் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சமுர்த்தி (திவிநெகும) அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லசந்த அழகியவண்ண அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2015 பெப்ரவரி 19ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom