இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 ஜனவரி 29ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-01-29

அதிமேதகு சனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்கள் கேட்டு விலகியுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ ஜயசிங்க பண்டார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம்
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i) பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க
(ii) நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க

ஆகியோர் சபையில் அறிக்கைகளை முன்வைத்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் திருத்தம்

நிலையியற் கட்டளைகள் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


அதனையடுத்து, 1550 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜனவரி 30ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom