இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர்

 

speaker l

 

பெயர் : சமல் ஜயந்த ராஜபக்ஷ
பதவி : இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் சபாநாயகர்
பிறந்த திகதி : 1942 ஒக்டோபர் 30
குடும்ப அந்தஸ்து : திருமதி சந்திரா மாலினி ராஜபக்ஷ என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு இரண்டு ஆண் புதல்வர்கள் உள்ளனர். மூத்த மகன் ஊவா மாகாணத்தின் முதலமைச்சராகவும் இலங்கையில் மிகவும் புனிதம் வாய்ந்த வணக்க ஸ்தலங்களுள் ஒன்றாகிய கதிர்காமம் ஸ்கந்த குமார மஹா தேவாலயத்தின் பாதுகாவலராகவும் உள்ளார். இளைய மகன் கெளரவ நிதி, திட்டமிடல் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளராகச் செயற்படுகின்றார்.

கெளரவ சமல் ஜயந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் கமத்தொழில் பிரதி அமைச்சராகவும் பாரளுமன்றப் பிரதிச் சபாநாயகராகவும் இலங்கையின் தென்மாகாணத்தின் ஒரு முன்னணி அரசியல்வாதியாகவும் திகழ்ந்த அமரர் கெளரவ டீ.ஏ. ராஜபக்ஷ அவர்களின் மூத்த புதல்வரரும் இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மூத்த சகோதரரும் ஆவார். ராஜபக்ஷ குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
கல்விப் பின்புலம் : இலங்கையில் பிரபல்யம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனமாகிய காலி றிச்மன்ட் கல்லூரியில் கல்வி பயின்றார்.
அரச சேவைத் தொழில் : ஒரு பொலிஸ் அதிகாரியாக அரச சேவையில் இணைந்து எட்டு வருடங்களுக்கும் மேலாக அந்தப் பதவியில் சேவையாற்றியுள்ளார். 1985ஆம் ஆண்டில் மும்முரமாக அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் அரச வர்த்தகப் பொதுக் கூட்டுத்தாபனத்தில் உதவிப் பொது முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார்.
அரசியல் ஈடுபாடு : 1985ஆம் ஆண்டில் நடைபெற்ற முல்கிரிகல வாக்களிப்பு பிரதேசத்திற்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி, இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக 1989ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் பிரவேசித்தார். 1989ஆம் ஆண்டு முதல் இற்றை வரையில் தொடர்ச்சியாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தனது ஆசனத்தை எல்லாத் தேர்தல்களிலும் தக்கவைத்துள்ளார்.

தற்போது வகிக்கும் பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் பின்வரும் பதவிகளை அவர் வகித்துள்ளார்.

• கமத்தொழில், காணி பிரதி அமைச்சர்
• துறைமுக, தென்மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்
• பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர்
• கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர்
• நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர்
• துறைமுக விமான சேவைகள் அமைச்சர்
பெற்றுள்ள கெளரவ பட்டங்கள் : “ஸ்ரீ லங்கா ஜனசேவா விபூஷண”
வகித்துள்ள ஏனைய பதவிகள் : 1. தலைவர், இலங்கை - ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கம்
2. தலைவர், இலங்கை - ஹங்கேரி பாராளுமன்ற நட்புறவுச் சங்கம்
3. தலைவர், மாவட்ட அபிவிருத்திக் குழு, அம்பாந்தோட்டை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2020-03-10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு