வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

திகதி : 2024-05-17

Print

வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் குழு அண்மையில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் பவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 10(1) ஆ பிரிவின் கீழ் 2008 ஒக்டோபர் 17 ஆம் திகதிய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட 26 ஆம் இலக்க பணிப்புரையினால், "வியாபாரிகளால் பொருட்களை விற்பனை செய்யும் பொழுது பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் எந்த வகையான கொண்டு செல்லும் பைகள் / உறைகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் எதுவும் விதிக்க முடியாது" என விதிக்கப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்யும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் 2024 மார்ச் 28 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரதி கிடைக்கும் வரை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடியாமல் இருப்பதாக இதன்போது புலப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டிருந்த போதிலும் இதன் தாக்கம் சமூகத்துக்குப் புரிவதற்கு சில காலம் எடுக்கும் என்பதால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து உரிய நடவடிக்கையை எடுப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை என்பவற்றின் அதிகாரிகளின் முன்னாயத்தம் தொடர்பில் கண்டறிவதற்கு இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய ஷொப்பிங் பைகளுக்கான கட்டணம் உற்பத்தியாளர்களிடமிருந்தா அல்லது பாவனையாளர்களிடமிருந்தா அறவிடுவது என்பது தொடர்பில் சிக்கல் காணப்படுவதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது. உலகில் ஏனைய நாடுகளில் வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் இரண்டாம் நிலை உறைகளிலிருந்து மாத்திரம் பாவனையாளர்களிடம் கட்டணம் அறவிடப்படுவதாகவும், உற்பத்தியாளர்களிடம் உறைகளுக்குக் கட்டணம் அறிவிடுவதானால், ஆரம்ப நிலை உறைகளுக்கு பாவனையாளர்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டி ஏற்படுவதாக குழு சுட்டிக்காட்டியது. அதனால் உற்பத்தியாளர் மீதி மிகைக்கட்டணம் அறிவிடத் தேவையில்லை எனவும் முன்னைய வர்த்தக நிலையங்களில் இலவசமாக வழங்கப்பட்ட ஷொப்பிங் பைகளுக்கு ஒரு கட்டணம் அறவிடுவதன் மூலம் பாவனையாளர்கள் ஷொப்பிங் பைகள் கொள்வனவு செய்வதை தவிர்ந்து வீடுகளிலிருந்து உறைகளை கொண்டுவரும் பழக்கத்தை ஏற்படுத்துவதே உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக ஏற்படுத்த வேண்டிய சமூகத் தாக்கம் என குழுவின் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும சுட்டிக்காட்டினார்.  

உலகின் ஏனைய நாடுகளில், பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் இரண்டாம் நிலை உறைகளில்  அறவிடப்படும் கட்டணம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அரசாங்க நிதியமொன்றில் வரவு வைக்கப்படுவதுடன், சூப்பர் மார்க்கெட்டுகள் மாத்திரம் அந்த நிதியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், சிறிய அளவிலான வர்த்தகங்களுக்கு அது பொருந்துவதில்லை எனவும் குழு சுட்டிக்காட்டியது. அத்துடன் பாவனையாளர்களின் மனதிற்கு ஒரு செய்தியை கொண்டுசெல்லும் வகையிலேயே உலகில் இந்த முறை பின்பற்றப்படுவதாகவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த நாட்டில் வினைத்திறனாக செயல்படுத்துவதன் மூலம், ஷொப்பிங் பைகளின் பயன்பாடு தொடர்பில் சமூகத்தில் மனப்பாங்கு ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்த முடியும் எனவும் குழுவின் கருத்தாக இருந்தது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ ஜயந்த சமரவீர மற்றும் கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1