இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து தயாரிக்கப்படவுள்ள சாசனத்துக்கு பொது மக்களின் கருத்துக்களைக் கோரத் தீர்மானம்

திகதி : 2024-01-22

நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவுள்ள சாசனம் குறித்து பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கோருவதற்கு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உப்புல் கலப்பதி தலைமையில் அண்மையில் (ஜன. 12) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கிலான சாசனத்துக்கான வரைபொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாக குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வரைபை கலந்துரையாடலுக்கான அடிப்படை ஆவணமாகக் கொண்டு நோயாளிகள் சார்பாக செயல்படும் அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களைப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிணங்க, பொது மக்களிடம் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு சுமார் ஆறு வார கால அவகாசம் வழங்குவது பற்றியும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் அதேநேரம், இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி இறுதி வரைபைத் தயாரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ம    யந்த திசாநாயக, தேசிய ரீதியில் நடைபெறக்கூடிய தேர்தலொன்றுக்கு முன்னர் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது குறித்த சட்டமூலமொன்றை நிறைவேற்ற எதிர்பார்த்திருப்பதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் சாசனத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

9

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom