இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023-05-12ஆம் திகதி கோப் குழுவில் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தெங்கு அபிவிருத்தி சபை மற்றும் தெங்கு ஆராய்சி நிலையம் ஆகியவை தொடர்பில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பற்றிய மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன

திகதி : 2023-06-28

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் குழுவின் உறுப்பினர்கள் இந்த மூன்று நிறுவனங்கள் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

•    கூட்டத்திற்கு போதுமான தகவல்களுடன் தயாராக இல்லை
மூன்று நிறுவனங்களின் அதிகாரிகளும் போதிய தகவல்களுடன் கூட்டத்திற்குத் தயாரான நிலையில் வருகை தரவில்லையென்பது இங்கு தெரியவந்தது. சில பதிவுகள் காணாமல் அல்லது கைவசம் இல்லாமல் இருந்தமையும் அவதானிக்கப்பட்டது. இந்த மூன்று நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக மாற்றுவது மிகவும் பொருத்தமானது என கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

•    பணியாளர்கள் வெற்றிடம்
ஏறத்தாழ 500 பணியாளர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இங்கு தெரியவந்ததுடன், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைக்கு அமைய இவை நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பின்புலங்களாக அமைந்துள்ளன.

மேலும் விசாரிக்கும்போது, நிர்வாக சேவைத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகளிடம் நடைமுறைக்குச் சாத்தியமற்ற தகுதிகள் கோரப்பட்டமை காரணமாக அவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதியற்றவர்களாகியமை தெரியவந்தது. அத்துடன், வருகை தரும் அடிப்படையில் கல்வி நோக்கத்திற்காக வெளிச்செல்லும் விஞ்ஞான ரீதியான பணியாளர்கள் வேறு துறைகளைத் தெரிவுசெய்கின்றமை குறித்தும் இங்கு புலப்பட்டது.

•    தென்னத்தோட்ட மூலோபாயத் திட்டம் மற்றும் ஒன்லைன் தேங்காய் ஏலம்
தென்னை மரங்களை நடுவதற்கான மூலோபாயத் திட்டத்தை வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார். மேலும், தேங்காய் தொடர்பான ஏலம் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு, ஏகபோகத்தை உருவாக்கியமை தெரியவந்தது. ஏலத்தை நடத்துவதற்கான காரணங்களை 02 வாரங்களுக்குள் முன்வைக்கவும் உத்தரவிடப்பட்டது.

அதிகாரிகளிடம் போதிய தகவல்கள் இல்லாததால், ஜூலை 6 ஆம் திகதி குழு முன்னிலையில் மீண்டும் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மூன்று நிறுவனங்களையும் தயாராகி வருமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைப்பதற்கான பகுப்பாய்வை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஸ்பகுமார, கௌரவ ஜனக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ ராஜிகா விக்கிரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom