இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தகவல் தொழிநுட்பம் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான நிபுணர்கள் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தடுத்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுடன் கலந்துரையாடல்

திகதி : 2023-06-20

தகவல்த் தொழிநுட்பம் மற்றும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான துறைசார் நிபுணர்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு எடுக்கக்கூடிய தீர்வுகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் 2023.06.09 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் கூடிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தடுத்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் இடம்பெற்றது.

வரி சீர்திருத்தங்களால் தகவல்த் தொழிநுட்பத் துறைக்குப் பின்னடைவு

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சீர்திருத்தங்களால், தகவல்த் தொழிநுட்பத் துறையில் உள்ள வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேற முற்படுவதாகவும், பல தகவல்த் தொழிநுட்ப நிறுவனங்கள் தமது  வர்த்தக நடவடிக்கைகளை வேறு நாடுகளுக்கு மாற்ற முயற்சிப்பதாகவும் இதன்போது தெரியவந்தது.

தகவல்த் தொழிநுட்பத் துறையானது இலங்கையின் பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் ஒரு சேவைத் துறையாகும். 2019 இல் இதன்மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்  ஈட்டப்பட்டுள்ளது. அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பங்களிப்பாகும். இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கையின் தகவல் தொழிநுட்ப நிபுணர்களுக்கு உலகில் அதிக கேள்வி உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு தகவல் தொழிநுட்பம் 8% அளவு உயர்வாகக் காணப்படுகின்றது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை இவ்வாறான உயர் வருமானம் ஈட்டும் நிலைக்கு உயர்த்துவதற்கான பிரேரணை அத்துறைசார்ந்த நிபுணர்களால் குழுவிடம் முன்வைக்கப்பட்டது.

தேசிய வர்த்தகக் கொள்கையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது

தேசிய வர்த்தகக் கொள்கையின்றி கைச்சாத்திடப்பட்டுள்ள நியாயமற்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களினால் இலங்கைக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பல தொழில் வல்லுநர்கள் இக்கலந்துரையாடலில் போது சுட்டிக்காட்டினர்.

எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் தேசிய வர்த்தகக் கொள்கையில் சேர்க்கப்பட வேண்டிய பிரதான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முன்மொழிவு தொழில் வல்லுநர்களின் தேசிய முன்னணியினால் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய, தேசிய வர்த்தகக் கொள்கையின் அவசியத்தை ஏற்றுக்கொண்டு, அத்தகைய கொள்கையை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தயார் என துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ காமினி வலேபொட தொழில் வல்லுநர்களுக்கு உறுதியளித்தார்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom