உணவுப் பாதுகாப்பு (விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள்) தொடர்பில் ஒரு தேசியக் கொள்கை தயாரிப்பது பற்றி தேசியப் பேரவையின் உப குழுவின் செயற்குழுவில் கலந்துரையாடல் |
திகதி : | 2023-06-19 |
உணவுப் பாதுகாப்பு (விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள்) தொடர்பில் எண்ணக்கரு ரீதியான தேசியக் கொள்கை பற்றி குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் தேசிய கொள்கை உப குழுவின் கீழ் உருவாக்கப்பட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்கான செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டது.
செயற்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசங்க நவரத்ன தலைமையில் அண்மையில் (ஜூன் 12) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடி, பெருந்தோட்டம், சுற்றாடல், சுற்றுலா மற்றும் காணி, கல்வி, சுகாதாரம், வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்கள் அடங்கிய செயற்குழுவினால் எந்த எண்ணக்கரு ரீதியான கொள்கையின் கட்டமைப்பைத் தயாரித்திருந்ததுடன், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய அவதானிக்கப்பட்ட திருத்தங்களுடன் இதன் வரைபை தேசியக் கொள்கை பற்றிய குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவுக்கு சமர்ப்பிப்பதாக செயற்குழுவின் தலைவர் கௌரவ அசங்க நவரத்ன இதன்போது குறிப்பிட்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








