12-05-2023ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் (கோப் குழு) புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது |
திகதி : | 2023-06-08 |
புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்படுவது இது மூன்றாவது தடவையாக அமைகின்றபோதும், அதில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படாமை குறித்து கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பொது மக்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பப் பெற்றிருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
- அகழ்வு செய்யப்பட்ட நிலத்தை முறையாகப் புனரமைப்பு செய்யாமை
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், அகழ்வு செய்யப்பட்ட காணியை புனரமைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படாமை கோப் குழுவின் தலைவரினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. போதிய நிதி இல்லாததால், அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அகழ்வு செய்யப்பட்ட நிலத்தை சீரமைக்க வசூலிக்கப்படும் கட்டண வீதம் போதுமானதா என்பதை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
- உரிமம் வழங்குவது தொடர்பான சிக்கல்கள்
உரிமம் வழங்குவதற்கு பணியகம் பின்பற்றும் நடைமுறைகள் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் அமையவில்லையென்றும், தன்னிச்சையானது என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வழங்கப்பட்ட உரிமங்கள் முறையான நடைமுறையின்றி தன்னிச்சையாக இரத்துச் செய்யப்பட்டமை, மற்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதும் இங்கு புலப்பட்டது. உரிமம் வழங்கும் அதிகாரம் பணியகத்திற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் சுற்றாடல் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதன் ஊடாக உரிமைப் பத்திரத்தை வழங்கும் சென்முறையானது சுயாதீனத் தன்மைக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துவிடும் என உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.
- சுயாதீனமான சட்ட அதிகாரியை நியமிக்க கோப் தலைவர் அறிவுறுத்தல்
பணியகத்தில் இடம்பெற்ற அனைத்து முறைகேடுகளையும் கண்டறிவதற்கு சுயாதீனமான சட்ட அதிகாரியொருவரை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ள கோப் குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், நிறுவனத்தில் நடக்கும் விவகாரங்களைக் கவனிப்பதற்காக கோப் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவைச் செயல்படுத்த தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ சாந்தபண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ பிரேம்நாத்.சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











