இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திலிருந்து கட்டுமானத் துறையைக் காப்பாற்றத் தேவையான அடிப்படைத் திட்டங்கள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

திகதி : 2023-06-07

பொருளாதார நெருக்கடியின் பாதிப்பினால் கட்டுமானத்துறையைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அடிப்படைத் திட்டங்கள் குறித்து பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட அவர்களின் தலைமையில் கடந்த மே 24ஆம் திகதி கூடிய இக்குழுவிலேயே இந்த விடயம் பற்றி ஆராயப்பட்டது.

இதற்காக, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கியதாக கட்டுமானத்துறையில் உள்ள சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கட்டுமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்களின் பிரதிநிதிகள், கட்டடக்கலை சங்கங்கள், பல்வேறு பொறியியல் சங்கங்கள், கட்டுமான கைத்தொழில் அபிவிருத்தி (CIDA) அதிகாரசபை, கட்டுமான கைத்தொழில் வர்த்தக சம்மேளனம் போன்றன இதில் கலந்துகொண்டன.

மொத்தத் தேசிய உற்பத்தியில் கணிசமான பங்களிப்பைச் செய்து சேவைத் துறையில் மிக உயர்ந்த வளர்ச்சியைக் காட்டிய இந்தத் துறையில் ஏற்பட்ட சரிவினால், 10 லட்சம் வேலை இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதுடன், நிறுவனங்கள் பல சரிவைச் சந்தித்துள்ளதாகவும், சொத்து இழப்புக்கள் ஏற்பட்டு, பலர் இத்தொழில்துறையைவிட்டு வெளியேறுதல், கட்டுமானத் துறையில் தொழிற்பயிற்சி பெறுபவர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளுக்குப் பொருத்தமான நிறுவனங்கள் இல்லாமை குறித்த விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு முன்மொழிவுகள் பற்றித் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட 50 பிரச்சினைகள் அடங்கிய ஆவணமொன்றும் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய தற்பொழுது காணப்படும் பிரச்சினைகள், குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுகளுக்குத் தலையீட்டை மேற்கொள்ள வேண்டிய நிறுவனங்கள் ரீதியாக வகைப்படுத்தி, அடிப்படையாக 10 துறைகளுக்குள் அடங்கும் வகையில் இரண்டு வாரங்களுக்குள் சுருக்கமான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவும், அதன் பின்னர் பொறுப்பான நிறுவனங்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், கட்டுமானப் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைப்பது தொடர்பில் அமைச்சின் கவனத்தை செலுத்துவதுடன், வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சு தலையிடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த கூட்டத்திற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ சஹான் பிரதீப் விதான, கௌரவ பழனி திகாம்பரம், கௌரவ டபிள்யூ. எச். எம். தர்மசேன, கௌரவ வசந்த யாப்பா பண்டார மற்றும் கௌரவ எம். ராமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom