இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பானை அறிக்கை சமர்ப்பிக்கவும் - வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்

திகதி : 2023-06-05

  • EPF ஐ முறைமைப்படுத்தும் பொறிமுறையை அமைக்க நிபுணர்களுக்கு குழுவின் முன்னிலையில் அழைப்பு
  • சில அரச நிறுவனங்கள் மற்றும் பிராந்திய தோட்ட நிறுவனங்கள் EPF இற்கு பணம் செலுத்தவில்லை - தொழில் திணைக்களம் தெரிவிப்பு
  • தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சமர்ப்பிப்பு
  • மேலதிக கலந்துரையாடல் மற்றும் கண்காணிப்புக்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு விஜயம் செய்யவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழு

 

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) நிதி முதலீடு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் (மே 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதற்கமைய, கடந்த 10 வருடங்களில் ஊழியர் சேமலாப நிதியத்தின் சேகரிக்கப்பட்ட நிதி, முதலீடு செய்யப்பட்ட நிதி, இலாபம் மற்றும் நட்டம் மற்றும் EPF நிதி எந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்றும் எந்த வகையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பன தொடர்பிலும் இரண்டு வாரங்களில் அறிக்கை வழங்குமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

இவை பொதுமக்களின் பணம் என்பதால், பணி ஓய்வுக்குப் பிறகு EPF நிதியை  எடுக்க விரும்புவோர் பயனடையும் வகையில் எந்தத் தொந்தரவும் இல்லாத ஒரு சுமூகமான மற்றும் வினைத்திறனான செயல்முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று குழுவின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, ஒரு முறைமை தொடர்பில் தீர்மானிப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையுடன் தொடர்புடைய நிபுணர்களை அழைப்பதற்கு குழு தீர்மானித்தது.

EPF விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் வைப்புக்களை மேற்கொள்ளும் போது இடம்பெறும் தாமதம் தொடர்பில் குழு அதிருப்தியை வெளிப்படுத்தியது.   

செயல்முறையை சீராகச் செய்வதற்கு மத்திய தரவுத்தளத்தின் அவசியத்தை ஏற்றுக்கொண்ட தொழில்  திணைக்களம், ஒரு சில அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பிராந்திய தோட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டிய EPF தொகையைச் செலுத்தத் தவறியுள்ளன என்பதை வெளிப்படுத்தியது.

அதற்கமைய, இது தொடர்பில் மேலதிகமாகக் கண்டறிவதற்கு, பொறுப்பான அரச நிறுவனங்கள் மற்றும் பிராந்திய தோட்ட நிறுவனங்களை வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைப்பதற்கு அறிவுறுத்தியது.

இதேவேளை, 24 ஆம் திகதி கூடிய குழுவின் கூட்டத்தில் தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ டிலான் பெரேரா, கௌரவ பைஸால் காசிம், கௌரவ மிலான் ஜயதிலக்க, கௌரவ சமன்பிரிய ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) வி. இராதாகிருஷ்ணன், எம். உதயகுமார், கே. சுஜித் சஞ்சய பெரேரா, கௌரவ வடிவேல் சுரேஷ் மற்றும் கௌரவ வேலு குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom