தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கோப் குழுவில் புலப்பட்டன |
திகதி : | 2023-05-29 |
• இரத்தினக்கல் தொழிற்துறையை ஒழுங்குபடுத்தும் ஒரேயோரு அதிகார சபையான தேசிய இரத்திணக்கல் ஆபரண அதிகாரசபை மூன்றாம் தரப்பினருடன் நேரடியாக இரத்தினக்கல் அகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்து.
• அதிகாரசபைக்கு எதிராகத் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 10 வருடங்களில் பதிவாகியுள்ள அனைத்து முறைகேடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிப்பு.
• இரத்திரனக்கல் அகழ்விற்கான உரிமங்களை வழங்குவதில் மிகவும் வெளிப்படையான பொறிமுறையொன்றைத் தயாரிக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை.
• அதிகாரி ஒருவரின் தவறான நடத்தை காரணமாக பதவிநீக்கத்துக்கு உள்ளாகி ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் தலைவரின் கோரிக்கைக்கு அமைய விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை.
• 10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மதிப்பிடப்பட்ட இரத்தினக்கல் தொகுதி 10,000 அமெரிக்க டொலருக்கு மதிப்பீடு செய்யப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தி.
• 19 மில்லியன் ரூபா செலவில் கணக்கியலுக்கான மென்பொருள் கட்டமைப்பை நிறுவுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், அதற்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனத் தெரிவிப்பு.
• உலக வர்த்தக மையத்திலிருந்து கடைகளைப் பெறுவதன் மூலம் 16 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டமை குறித்து அறிக்கை கோரல்.
• அதிகாரசபைக்கான கட்டடத்தை வாடகைக்கு எடுக்கும் போது அதிக விலைக்கு பெறப்பட்டமையால் 36 மில்லியன் ரூபா நட்டம்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.05.24ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) 2020, 2021ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நயாகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காகத் தேசிய இரத்திணக்கல் ஆபரண அதிகாரசபையினை அழைத்திருந்தது.
பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன
இரத்தினக்கல் தொழிற்துறையை ஒழுங்குபடுத்தும் ஒரேயோரு அதிகார சபையான தேசிய இரத்திணக்கல் ஆபரண அதிகாரசபை மூன்றாம் தரப்பினருடன் நேரடியாக இரத்தினக்கல் அகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்து
அதிகாரசபையானது மூன்றாம் தரப்பினருடன் நேரடியாக இரத்தினக்கல் அகழ்வு வியாபாரத்தில் ஈடுபடுவது குறித்து கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண சட்டத்தின்படி, இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறையை ஒழுங்குபடுத்தும் ஒரே அதிகாரசபை இது என்பதால், அந்த அதிகாரசபை மூன்றாம் தரப்பினருடன் நேரடியாக இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று குழு வலியுறுத்தியது.
இரத்திரனக்கல் அகழ்விற்கான உரிமங்களை வழங்குவதில் மிகவும் வெளிப்படையான பொறிமுறையொன்றைத் தயாரிக்கப் பணிப்புரை
இரத்தினக்கல் அகழ்வுக்கான சுரங்கங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் போது பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சில ஊழல் அதிகாரிகள் கண்ணிவெடிகளை தங்களின் நண்பர்களுக்கு வழங்குவதால் அரசாங்கத்திற்கு உரிய வரி வருமான இழப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும்போது அதிக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் எனக் கோப் குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பரிந்துரைத்தார்.
தொடர்ச்சியாக அதிகாரசபை மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நிலையில் கடந்த 10 வருடங்களில் இடம்பெற்ற மோசடிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான விசாரணை நடத்தப் பணிப்புரை
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், கடந்த 10 வருடங்களில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது. இதற்கான வழிகாட்டல் தேவைப்பட்டால் ஓய்வுபெற்ற சிரேஷ்ட கணக்காய்வாளர் ஒருவரின் உதவியை நாடுமாறும் குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
10 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மதிப்பிடப்பட்ட இரத்தினக்கல் தொகுதி 10,000 அமெரிக்க டொலருக்கு மதிப்பீடு செய்யப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தி
2021ஆம் ஆண்டில் இந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரத்தினக்கல் தொகுதிக்கு பின்னர் 10,000 டொலர் மதிப்பீடு செய்யப்பட்டமை குறித்துக் கலந்துரையாடப்பட்டது. தற்பொழுது இதற்கு அருங்காட்சி மதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு அமைய அதிகாரிகளின் தொழில்ரீதியான திறமை குறித்து பிரச்சினை இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
நிரந்தரமான பணிப்பாளர் நாயகம் இல்லாமை
அதிகார சபைக்கு நிரந்தர பணிப்பாளர் நாயகம் ஒருவர் இல்லாமை இங்கு கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய பணிப்பாளர் நாயகமும் நிர்வாக சேவையில் உள்ள அதிகாரியே என செயலாளர் தெரிவித்தார். எனவே, நிரந்தர பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு குழு அறிவுறுத்தியது. அதற்கு தற்போதுள்ள சம்பள விகிதங்கள் தடையாக இருந்தால் கோப் குழு தலையிட்டு நிதியமைச்சு, ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அதிகாரசபைக்காக ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுக்கும் செயன்முறை தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்கக் கோரிக்கை
அதிகார சபைக்கு கட்டடம் ஒன்றை வாடகைக்கு எடுக்கும் போது அதிக விலைக்கு வழங்கப்பட்ட கட்டடத்திற்கு 4.5 மில்லியன் ரூபா மாதாந்த வாடகை அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தினால் அதிகாரசபை இயங்கி வந்த கட்டிடத்திற்கு அருகில் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக அதிகாரசபையின் கட்டிடம் சேதமடைவதால் பாதுகாப்பற்ற நிலையில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி, குறைந்த விலை மனுவைச் மர்ப்பித்த நிறுவனத்தை தெரிவு செய்யாத காரணத்தினால், பணியமர்த்தப்பட்ட இரண்டு வருடங்களுக்கு மேலதிகமாக 36 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். மேலும், அதிகாரசபையின் கட்டடத்தை சேதப்படுத்திய தனியார் நிறுவனம் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளதோடு, அந்த நிறுவனத்திடமிருந்து ரூ. 152 மில்லியன் தொகை மீளப் பெறப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குழப்பமான சூழல் காணப்படுவதால், இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு 2 வாரங்களுக்குள் அறிக்கையை வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.
உலக வர்த்தக மையத்திலிருந்து கடைகளைப் பெறுவதன் மூலம் 16 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வைப்பு இழப்பு ஏற்பட்டமை குறித்து அறிக்கை கோரல்
தனியார் நிறுவனத்துக்கும், அதிகாரசபைக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி சுமார் 16 மில்லியன் ரூபா பிணைத்தொகைக்கு உலக வர்த்தக மையத்தில் 35 கடைகள் பெறப்பட்டபோதும், ஒப்பந்தம் 2021 இல் முடிவடைந்து போயிருந்தாலும் ஒரு கடை மீள ஒப்படைக்கப்படாததால் பிணைத்தொகையை விடுவிக்க முடியாதுபோயுள்ளது. இது தொடர்பான வழக்கு உள்ளமையும் இங்கு தெரியவந்தது. இது குறித்து தெளிவான பதில் அளிக்கத் தவறியதால், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அமைச்சின் செயலருக்கு குழு உத்தரவிட்டது.
19 மில்லியன் ரூபா செலவில் கணக்கியலுக்கான மென்பொருள் கட்டமைப்பை நிறுவுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டபூதும் இன்னமும் பணி நிறைவடையவில்லை
19 மில்லியன் ரூபா செலவில், குறித்த நிறுவன பாவனைக்கான கணக்கியல் மென்பொருளை நிறுவுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதற்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நிறுவனத்திற்கு சுமார் 10 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் இந்தப் பணிகளை நிறைவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்ட குழு, இதுபற்றி உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயலாளருக்கு அறிவுறுத்தியது.
முறையான விசாரணையின்றி இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரியை மீண்டும் பணியில் சேர்த்தல்
முதற்கட்ட விசாரணை நடத்தியபோது, முறைகேடு காரணமாகப் பணிப்பாளர் (நிலச் சுரங்கம்) பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, உள்ளகக் கணக்காய்வாளரினால் முறையான விசாரணையின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. முன்னாள் தலைவரிடமிருந்து குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி செய்த முறையீட்டின் பேரில் உள்ளக கணக்காய்வாளர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து எவ்வித செல்வாக்கும் இன்றி தீர்மானம் எடுக்குமாறு கோப் குழு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








