அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் அறுவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி |
திகதி : | 2023-05-19 |
அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் அறுவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் ((மே 12) வழங்கப்பட்டது.
அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் புதிய செயலாளராக யமுனா பெரேராவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எம்.டபிள்யு.எஸ் சமரதிவாகரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
அதற்கு மேலதிகமாக, மக்கள் வங்கியின் தலைவராக சுஜீவ ராஜபக்ஷவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
மேலும், இலங்கை அணுசக்தி சபையின் தலைவராக பேராசிரியர் எஸ்.ஆர்.டி. ரோசாவின் நியமனத்துக்கும், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ரத்னசிறி கலுபஹனவின் நியமனத்துக்கும், மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனத்தின் தலைவராகப் பொறியியலாளர் ஏ.கல்கெடியவின் நியமனத்துக்கும், பகிரங்க அரங்காட்டுகைச் சபையின் தலைவராக ஸ்டெல்லா மாரப்பனவின் நியமனத்துக்கும், இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக ஜயந்த விஜேரத்னவின் நியமனத்துக்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (12) கூடியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ (சட்டத்தரணி) தலதா அத்துகோரல, கௌரவ உதய கம்மன்பில, கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






