காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் ஆராய்வு |
திகதி : | 2023-04-28 |
2015 முதல் வருடாந்த அறிக்கைகள் இல்லாமை – குறை தீர்க்கப்படவில்லை
22/10/22 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளைத் தொடர்ந்தான நிலைமைகள் குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார வினவினார். கடந்த 2015 ஆம் ஆண்டே இறுதியாக வருடாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையான வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபோதும் அதனை மேற்கொள்ளமை குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
காணிகளை வழங்குவதற்கான நடைமுறைகள் இன்னமும் இல்லை
ஆணைக் குழுவினால் காணிகளை வழங்குவதற்கான நெறிமுறைகள் தொடர்பில் கடந்த கூட்டத்தில் குழு வலியுறுத்தியிருந்தபோதும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காணிகளை உடமை மாற்றம் செய்வது தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், இது ஏன் நெறிமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் தலைவர் அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்தார். குறிப்பாக ரஸாகலவத்த காணியை உரிமைாற்றும் செய்யும்போது உரிய நடைமுறை பின்பற்றப்படாமை குறித்து கௌரவ அளுத்கமகே கேள்வியெழுப்பினார். இந்த அறிக்கைகளை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டது.
முறையான கோப்புகளை பராமரிக்கத் தவறியமை
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் காணாமல் போன கோப்புகள் தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் உடனடி விசாரணை நடத்துமாறு அமைச்சுக்கு தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், காணி தொடர்பான தற்சமயம் காணாமல் போன கோப்புகளின் டிஜிட்டல் தரவுகளை கைப்பற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை வழங்குமாறும், இதனை விரைவில் முடித்து 30 நாட்களுக்குள் அதன் முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறும் அமைச்சின் செயலாளருக்கு தலைவர் அறிவித்தார்.
குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகள்
குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றை ஆரம்பிப்பதற்கு உள்ளக நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் தலைவர், ஆணைக்குழுவிற்குப் பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ (சட்டத்தரணி) அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ நிமல் லான்சா, கௌரவ நளின் பண்டார ஜயமஹா, கௌரவ சமிந்த விஜயசிறி, கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ (மேஜர்) சுரத்ஷன தெனிபிட்டிய, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.ராமேஸ்வரன், கௌரவ ரஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









