பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்கால நடவடிக்கைக்காக மூன்று உப குழுக்கள் |
திகதி : | 2023-04-28 |
பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்கால நடவடிக்கைக்காக மூன்று உப குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பதிரன தலைமையில் இந்தக் குழு அண்மையில் (ஏப். 25) பாராளுமன்றத்தில் கூடிய போது இந்த மூன்று உப குழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, குழுவின் உறுப்பினர்களினால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய பெருந்தோட்டக் கைத்தொழில், கைத்தொழில் மற்றும் தொழிநுட்பம், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள், வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய மூன்று உபகுழுக்களை ஸ்தாபிப்பது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையப்பட்டது. குறித்த உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் குழுவின் அடுத்த அமர்வின் போது மேற்கொள்ளப்படும் எனக் குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார். மேலும், இந்த உப குழுக்களில் பணியாற்ற விரும்பும் உறுப்பினர்கள் தமது முன்மொழிவுகளை சமர்பிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
துறைசார் மேற்பார்வைக் குழுவினூடாக வழங்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதன் முன்னேற்றம் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய குழுவில் பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு விடயங்கள் தொடர்பிலும் மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்கு அவசியமான பொறிமுறையை மேற்கொள்ளுமாறும் குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
அதற்கு மேலதிகமாக, துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு இளைஞர் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்வது, இந்தத் துறையுடன் சம்பந்தப்பட்ட குழுவின் விடயப்பரப்பின் கீழ் வராத நிறுவனங்களை தொடர்புபடுத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட துறையுடன் தொடர்புபட்ட மாகாண சபைகளின் கீழ் இயங்கும் நிறுவனங்களை குழுவில் இணைந்துகொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ கருணாதாச கொடிதுவக்கு, கௌரவ சம்பத் அத்துகோரல, கௌரவ சுஜித் சஞ்சய பெரேரா, கௌரவ உதயகாந்த குணாதிலக மற்றும் கௌரவ வேலு குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








