பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் தலைவராக கௌரவ தாரக பாலசூரிய ஏகமனதாகத் தெரிவு |
திகதி : | 2023-04-27 |
பாராளுமன்றத்தில் இன்று (ஏப். 27) நடைபெற்ற பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவின் முதலாவது கூட்டத்தில் அதன் தலைவராக இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக பாலசூரிய ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க அவரது பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ராமேஸ்வரன் அதனை வழிமொழிந்தார்.
அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் செயலாற்றுகை, நிதி உறுதிப்பாடு, முதலீட்டு முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம் மற்றும் அரச - தனியார் பங்குடமைகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பரிசீலிப்பது இந்தக் குழுவின் பணிகளாகக் காணப்படுகின்றன.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு போன்ற ஏனைய நிதிக் குழுக்களின் விடயதானங்களுடன் முரண்படாத வகையில் குழுவின் செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய தலைவரை சந்தித்துக் கலந்துரையாடுவதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ வருண லியனகே மற்றும் கௌரவ (கலாநிதி) நாளாக கொடஹேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வாவும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









