இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆராய்வு |
திகதி : | 2023-04-26 |
2023 மார்ச் 07 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் சுயாதீன விசாரணை நடத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபோதும் இது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் மேற்கொள்ளப்படாமை குறித்து அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அதிருப்தி வெளியிட்டார்.
- 06/04/2023ஆம் திகதி வரை உள்ளகக் கணக்காய்வாளரை கூட்டுத்தாபனம் நியமிக்கவில்லை
- நிதி முறைகேடு மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை
- அமைப்பின் பணி அறிக்கையுடன் இணைந்த நிறுவனத் திட்டம் இன்னும் தயாரிக்கப்படவில்லை
எனவே, மேற்கண்ட அனைத்து விடயங்களுக்கும் 2023 ஜூன் 23 ஆம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை குழுவின் தலைவர் முற்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவந்தார்.
56 நபர்களாக இருக்க வேண்டிய நிலையில் தற்போது 19 பேர் மட்டுமே பணிபுரியும் நிலையில், எஞ்சிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு உதவுமாறும் குழுவின் தலைவர் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜகத் புஷ்பகுமார, இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ நிமல் லான்சா, கௌரவ நளின் பண்டா ஜயமகா, கௌரவ சமிந்த விஜயசிறி, கௌரவ ஜகத் குமார சுமித்திரராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிப்பிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.ராமேஸ்வரன், கௌரவ ரஜிகா விக்ரமசிங்ஹா, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










