இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியன கோபா குழு முன்னிலையில்

திகதி : 2023-04-18

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதுடன், கடந்த காலங்களில் இத்திணைக்களம் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கணக்காய்வாளரின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராயும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் எதிர்வரும் 26ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom