இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

திகதி : 2023-04-11

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (ஏப். 04) கிடைத்துள்ளது.

இதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம்.எம். நைமுதீனின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது தவிரவும், பிலிப்பைன்சுக்கான இலங்கைத் தூதுவராகக் கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டம் அண்மையில் (04) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதுடன், இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன் செனவிரத்ன, கௌரவ (சட்டத்தரணி) அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ (சட்டத்தரணி) தலதா அதுகோரல மற்றும் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom