ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வெகுவாகப் பாராட்டியுள்ள அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கத்தினால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்தவும், புத்தாக்கம் மிக்கதாக்குவதற்குமான தேசிய மூலோபாயமொன்றை முன்வைக்குமாறு பணிப்புரை |
திகதி : | 2023-04-03 |
1. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வெகுவாகப் பாராட்டியுள்ள அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார, அரசாங்கத்தினால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களை நவீனமயப்படுத்தவும், புத்தாக்கம் மிக்கதாக்குவதற்குமான தேசிய மூலோபாயமொன்றை முன்வைக்குமாறு பணிப்புரை
கணக்காய்வாளர் நாயகத்தினால் குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் நிலைமைகள் பற்றி குழுவின் தலைவர் மற்றும் குழுவின் பாராட்டுக்களுடன் கூட்டம் தொடங்கியது. திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் பல்கலைக்கழகத்தின் நடைமுறைச் செலவுகளைச் செய்வதற்காக நிலையான வைப்பொன்றைத் தொடர்ச்சியாகப் பேணிய பல்கலைக்கழகத்தின் முயற்சி வெகுவாகப் பாராட்டுக்குள்ளானது. இந்த முயற்சி ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் எனத் தெரிவித்த தலைவர், இளங்கலை மற்றும் முதுகலை கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுக்க ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
2. போதியளவு பதவியணி இன்மை
பொருளாதார நெருக்கடி காரணமாக, அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் பதவியணியை நிரப்புவதில் சிரமம் ஏற்பட்டது. இது தொடர்பாகப் பரிகாரம் கோரி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு உத்தியோகபூர்வமாகக் கடிதம் எழுதுமாறு குழுவின் தலைவர் பல்கலைக்கழகத்திற்குப் பணிப்புரை விடுத்தார்.
3. காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கோப் குழு நடவடிக்கை
அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான காணியொன்றை பணம் செலவுசெய்யப்பட்டுள்ளபோதும் முழுமையாகக் கையகப்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. கொவிட் சூழலின் பின்னர் இராணுவத்தினர் இந்த வளாகத்தைப் பயன்படுத்தியிருந்தனர். இது விடயத்தில் விரைவான தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்துவதாகக் குழுவின் தலைவர் உறுதியளித்தார்.
4. வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் கோப் குழுவின் தீர்க்கமான உத்தரவு
2012-2016 இலிருந்து உலக தரவரிசையில் சரிவைப் பெற்றிருந்த நிலையில் பல்கலைக்கழகம் படிப்படியாக முன்னேறியுள்ளது. இந்தத் தரவரிசையை உயர்த்திய சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தவிர, மாணவர்களுக்கிடையேயான மோதல்கள் மற்றும் மிக உயர்ந்த தகுதித் தடையின் காரணமாக பல்கலைக்கழகத்துக்கான அனுமதியைப் பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ஒரு தடையாக அமைந்துள்ளது எனப் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியது. பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களின் படிப்புக்குத் துணையாக இருப்பதற்கு மாணவர் கடன்கள் அல்லது மாணவர் குழுவை ஒன்றிணைத்தல் போன்ற வழிகளை ஆராயுமாறும் தலைவர் வலியுறுத்தினார். இதை நிவர்த்தி செய்ய ஒரு தேசிய கொள்கையை உருவாக்கி அதை மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தினார்.
05. விசாரணையின் பின்னர் கோப் குழு பின்வரும் பரிந்துரைகளை வழங்கியது
- ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடங்குதல் மற்றும் 02 வாரங்களுக்குள் நிலையை அறிக்கையிடல்.
- கேட்போர் கூடத்தின் நிலை குறித்து 03 மாதங்களுக்குள் அறிக்கை தயாரித்தல்
- நிதியமைச்சுடன் இணைந்து செயற்படுதல் மற்றும் 03 மாதங்களுக்குள் பயன்படுத்தப்படாத புலமைப்பரிசில் நிதிகள் பற்றித் தெரிவித்தல்
- ஒப்பந்த மீறல் தொடர்பான மீட்டெடுப்புகளைத் தீர்க்க 02 வாரங்களுக்குள் அறிக்கையிடல்.
- ஒரு உணவகத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு நிறுவனத்துடன் பரஸ்பர முடிவு ஒப்பந்தத்தில் உடனடியாக கையெழுதிடல்.
பல்கலைக்கழக கல்வியின் முன்னேற்றத்திற்காக இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய தேசிய கொள்கை கட்டமைப்பை வகுப்பதில் தலையிடுமாறு கோப் குழுவின் தலைவர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குப் பணிப்புரை விடுத்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









