இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறை சார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி தெரிவு

திகதி : 2023-04-03

வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறை சார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அண்மையில் (மார்ச் 22) ஏகமனதாக பாராளுமன்றில் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் (22) நடைபெற்றது. அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமன்பிரிய ஹேரத் தலைவரின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம். மரிக்கார் அதனை வழிமொழிந்தார்.

ஊழியர் சேம நிதியம், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு ஆகிய நிறுவனங்களின் செயற்திட்டம்  மற்றும் நிதி ஒதுக்கீட்டுத் திட்டம் ஆகியவற்றை குழுவுக்கு சமர்ப்பிப்பதற்காக அந்நிறுவனங்களை குழுவின் முன்னிலையில் அழைப்பதாக குழுவின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.டபிள்யூ.டி. சஹன் பிரதீப் விதான, கௌரவ இஷாக் ரஹுமான், கௌரவ சமன்பிரிய ஹேரத், கௌரவ எஸ்.எம். மரிக்கார் மற்றும் கௌரவ பைஸால் காசிம் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom