அரசாங்கத்தின்வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்தல் தொடர்பில் நவீன கணினிக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கான நடைமுறை குறித்து 04 முக்கிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி புதிய தொழில்நுட்பக் குழு – அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் வழிவகைகள் பற்றிய குழு இணைந்து நடத்திய கூட்டத்தில் தீர்மானம் |
திகதி : | 2023-03-31 |
- பூர்வாங்கத் திட்டங்களை மே 15க்குள் குழுவிடம் சமர்ப்பிக்க உத்தரவு
- 2016ல் கோபா குழுவின் பரிந்துரைகளை இதுவரை அமல்படுத்தாமை குறித்து அரசாங்கத்தின் வருமானத்தை சேகரிக்கும் நிறுவனங்கள் மீது குழு கடும் அதிருப்தி
அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்ததலுடன் தொடர்புடைய சகல அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக, பிரதமரின் செயலாளரின் தலைமையில் ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமிப்பதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மற்றும் வழிவகைகள் பற்றிய குழு ஆகியன இணைந்து அண்மையில் நடத்திய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதி, நிதி அமைச்சு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாவர்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண மற்றும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கமைய, தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரு வாரத்திற்குள், பூர்வாங்கக் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும், மே 15ஆம் திகதி கோபா குழுவின் முன் அடிப்படைத் திட்டங்களை முன்வைத்து அதற்கான அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் தொழில்நுட்பக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை ஒவ்வொரு மாதமும் இது குறித்து முன்னேற்ற ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அரசாங்கத்தின் வருமானத்தை சேகரிப்பது, மேம்படுத்துவதுடன் தொடர்புபட்ட சகல நிறுவனங்களையும் ஒன்றிணைத்துக் கணினிக் கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு 2016ஆம் ஆண்டில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பணிப்புரை வழங்கப்பட்டிருக்கின்ற போதும் இது நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் கோபா குழுவின் தலைவர் அதிருப்தியை வெளியிட்டார். சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தில் பொருளாதார நெருக்கடியை தீர்த்து அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து முறையான கணினி அமைப்பை தயாரிப்பது இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரவணக்க குறிப்பிடுகையில், தேவையான தொழில்நுட்பப் பின்னணி, அதற்கான அதிகாரங்களை உரிய நிறுவனங்களுக்கு எந்தளவிற்கு வழங்க வேண்டும் என்பதை ஆராய்ந்து உறுதியான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.
குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் கௌரவ மொஹான் பிரியதர்ஷன சில்வா, இராஜாங்க அமைச்சர் கௌரவ சாமர சம்பத் தசநாயக, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ ஜயந்த கட்டகொடு, கௌரவ ஜே.சீ.அலவத்துவல, கௌரவ மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்னவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











