இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (VTA) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) விசாரணை |
திகதி : | 2023-03-31 |
1. சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார கேள்வியெழுப்பினார்
உள்ளகக் கணக்காய்வாளரின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில் அதிகாரசபையின் பிரதம கணக்காளர் பணியாற்றுவதன் செல்லுபடியாகும் தன்மை ஆர்வத்திற்கு முரண்பாடு பற்றிய கேள்வியை எழுப்புகிறது என்பது தொடர்பில் குழு ஆரம்பத்தில் கேள்வியெழுப்பியது. அதனையடுத்து இதுபோன்ற விடயங்கள் பற்றி மேற்பார்வை செய்வதற்கு பணிப்பாளர் நாயகம் ஒருவர் இல்லை என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
முன்னாள் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரசபையின் அதிகாரங்களை செயற்படுத்துவதற்குப் பொறுப்பானவர் ஒருவர் இல்லை என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. சம்பளத்திற்கான காசோலைகளில் கையொப்பமிட்டதற்கு யார் பொறுப்பு என குழு வினவியபோது, குறித்த நடைமுறையில் முறைகேடு இருப்பது கண்டறியப்பட்டது.
இது சட்டம் பல அம்சங்களில் முழுமையற்று காணப்படுவதை ஆராய வழிவகுத்தது. இச்சட்டத்தை அடுத்த 03 மாதங்களுக்குள் மீளாய்வு செய்யுமாறும், அதன் நிலைமை குறித்து 02 வாரங்களுக்குள் குழுவுக்கு முன்வைக்குமாறும் குழுவின் தலைவர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
2. பெரிய அளவிலான பணிநீக்கங்களுக்கு மத்தியில் VTA இன் சட்டரீதியான செயல்பாடுகள் தொடர்பில் குழுவின் தலைவர் ஆய்வு
VTA இன் பணிகள் மற்றும் அவற்றை செயற்படுத்துவது தொடர்பில் தலைவரின் கடுமையான கேள்விகளை அடுத்து அதன் பணிநீக்கங்கள் பற்றி வெளிப்படுத்தப்பட்டன. பாடநெறிகளின் விருத்தியை நிர்ணயிக்கும் ஆய்வுகள் காலாவதியானது மற்றும் பயனற்றது எனவும் கண்டறியப்பட்டது. சர்வதேச தொழிற் சந்தையின் கேள்விகளுக்கு ஏற்ப VTA தொடர்ந்து செயற்படாமை, வளர்ந்து வரும் உலகில் வேலை வாய்ப்புகளை கடுமையாக முடக்குமென்பதால், இந்நிலை தொடர்வது மனசாட்சிக்கு விரோதமானது என குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
பாடங்களின் தெரிவை மேம்படுத்தல், பாடநெறிகளின் பொருத்தப்பாடு மற்றும் வினைத்திறன் தன்மை, பாடத்திட்ட மேம்பாடு என்பன தொடர்பில் நாம் வாழும் தற்போதைய உலகின் தரங்களுக்கு அமைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
வருடாந்தம் சாரிசாரியாக சாதாரண தரத்தில் 300,000 பேர் இடைநிற்றல் மற்றும் உயர் தரத்தில் 200,000 பேர் இடைநிற்றல்கள் இடம்பெறுவதுடன், இந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்கு தொழில் பயிற்சியில் 105,000 இடங்கள் மாத்திரமே காணப்படுவது கண்டறியப்பட்டது.
அதற்கமைய, சர்வதேச தொழிற் சந்தையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வொன்றையும், விரிவான சந்தை ஆய்வொன்றை மேற்கொண்டு அதிகார சபைக்கான பெருநிறுவனத் திட்டமொன்றையும் மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.
3. 2017 மற்றும் 2018 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுப்பப்பட்ட விடயங்கள்
2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான பணியாளர்கள் மாற்றத்தின் காரணமாக போதிய ஆதாரங்கள் இல்லாததால் நிதி மற்றும் நிர்வாக முடிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரசபையில் பணியாற்றிய அப்போதைய உறுப்பினர்கள் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படும் வரை 2023 மே 09 ஆம் தேதி வரை கலந்துரையாடல் நிறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ ஜானக வாக்கும்புற, கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ சாந்த பண்டார, கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத், கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மஹிந்தானந்த அழுத்கமகே, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ சஞ்சீவ எதிர்மான்ன, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, கௌரவ ராஜிகா விக்ரமசிங்க மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










