இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் கண்டறிய பாராளுமன்ற விசேட குழு |
திகதி : | 2023-03-24 |
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இக்குழு பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ வடிவேல் சுரேஷின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் கடமையாற்றுவதற்கு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (மார்ச் 24) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, கௌரவ நலின் பிரனாந்து, கௌரவ (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல, கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, கௌரவ (டாக்டர்) கயாஷான் நவனந்த, கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி, கௌரவ அலி சப்ரி ரஹீம், கௌரவ குமாரசிறி ரத்னாயக்க, கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ (திருமதி) மஞ்சுலா திசாநாயக, கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத், கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய மற்றும் கௌரவ ஜகத் சமரவிக்ரம ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






