சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் கௌரவ தலதா அத்துகோரல தெரிவு |
திகதி : | 2023-03-24 |
சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல தெரிவு செய்யப்பட்டார்.
இந்தக் குழு 2023.03.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் தெரிவு செய்யப்பட்டார். அவரது பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முதிதா பிரசாந்தி வழிமொழிந்தார்.
இந்தக் குழுவுக்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகம் ஆகிய நிறுவனங்களை அழைக்க முடியும் என இதன்போது புலப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன, கௌரவ முதிதா பிரசாந்தி, கௌரவ ரஜிகா விக்ரமசிங்க, கௌரவ டீ. வீரசிங்க, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, கௌரவ ஜகத் சமரவிக்ரம மற்றும் கௌரவ (பேராசியர்) திஸ்ஸ விதாரண ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








