உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டீ. வீரசிங்க தெரிவு |
திகதி : | 2023-03-24 |
உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டீ. வீரசிங்க தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் அவரது பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சி அதனை வழிமொழிந்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு 22.03.2023 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் சம்பந்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டதை அடுத்து அவை இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு முன்வைக்கப்படுவதுடன், அதன்போது தேவை ஏற்படின் அவற்றுக்கு திருத்தங்களை முன்வைக்க முடியும் என இதன்போது புலப்பட்டது.
இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு கமத்தொழில் அமைச்சு, கடற்றொழில் அமைச்சு, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு போன்ற அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்களை அழைக்க முடியும் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜகத் சமரவிக்ரம மற்றும் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








