இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஊடகம், இளைஞர், பாரம்பரியம் மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார தெரிவு

திகதி : 2023-03-23

ஊடகம், இளைஞர், பாரம்பரியம் மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லலித் வர்ணகுமார பாராளுமன்றத்தில் அண்மையில் (மார்ச் 21) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இக்குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜயந்த கெட்டகொட முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமன வீரசிங்ஹ வழிமொழிந்தார்.

இந்தக் குழுவின் தலைவராக தன்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வலித் வர்ணகுமார, நாட்டை அபிவிருத்தி செய்வதில் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவுடன் சம்பந்தப்பட்ட துறையில் முழுமையான பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ நிபுண ரணவக்க மற்றும் கௌரவ ஜகத் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom