சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பில் வங்கித் துறையுடன் பாராளுமன்ற விசேட குழு கலந்துரையாடல் |
திகதி : | 2023-03-23 |
இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது மற்றும் அவற்றில் காணப்படும் நிதிச் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக வங்கித் துறையுடன் கலந்துரையாடியது.
இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே தலைமையில் அண்மையில் (மார்ச் 16) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்க மற்றும் தனியார் துறை சார்ந்த வங்கித் துறையின் பிரதிநிதிகளால் நாட்டில் தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்துக்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன. பிரதானமாக சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்துறை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஒவ்வொரு துறை தொடர்பிலும் சரியான தகவல்கள் அடங்கிய தரவு அமைப்பொன்றை தயாரித்து பராமரிப்பதன் அவசியம் பற்றி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மதுர விதானகே இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்யும் போது அரச நிறுவனங்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், வங்கி துறையினரால் இத்துறையை மேம்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் நீண்டகால முன்மொழிவுகளை எழுத்து மூலமாக குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்கவும் இக்குழுவில் கருத்துக்களை முன்வைத்தார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ லலித் வர்ணகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










