இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்திராராச்சி தெரிவு

திகதி : 2023-03-22

திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அமைக்கப்பட்டுள்ள வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி நேற்று (மார்ச் 21) தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதயன கிரிந்திகொட இவருடைய பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனை வழிமொழிந்தார்.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு நேற்று (21) முதற்தடவையாக் கூடியபோதே புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.

புதிய துறைசார் மேற்பார்வைக் குழுவான வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஊடாக அரசாங்கத்தின்  பணிகளை வெளிப்படையான முறையில் கண்காணிக்க முடியும் என்றும், கொள்கை உருவாக்கம் போன்ற விஷயங்களில் இன்னும் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தி தேவையான ஆலோசனைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த குறித்த குழுவின் தலைவர்  குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் குறித்த மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன, கௌரவ மொஹமட் முசம்மில், கௌரவ ஜே.சி. அலவத்துவல, கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ குணதிலக ராஜபக்ஷ மற்றும் கௌரவ மர்ஜான் பலீல் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், குழுவின் செயலாளராக பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் எச்.ஈ. ஜனகாந்த சில்வாவும் இதில் இணைந்துகொண்டிருந்தார்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom