இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவு

திகதி : 2023-03-22

தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் நேற்று (மார்ச் 21) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இக்குழுவின் முதலாவது கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குணதிலக ராஜபக்ஷ முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தம்மிக்க பெரேரா வழிமொழிந்தார்.

அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் கொள்கைகள் தொடர்பில் மேற்பார்வை செய்தல் மற்றும் நாட்டின் பௌதிகத் திட்டங்கள் தொடர்பில் இக்குழு பணியாற்றவுள்ளதால் கட்சி பேதமின்றி செயற்பட எதிர்பார்ப்பதாக குழுவின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரான் விக்ரமரத்ன , கௌரவ அஷோக் அபேசிங்க, கௌரவ ஹர்ஷண ராஜகருணா மற்றும் கௌரவ சுதத் மஞ்சுள ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom