இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவின் தலைவராக கௌரவ காமினி லொக்குகே போட்டியின்றித் தெரிவு

திகதி : 2023-03-21

வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி லொக்குகே இன்று (மார்ச் 21) போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டார். இராஜாங்க அமைச்சர் கௌரவ அநுப பஸ்குவல் இவருடைய பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாதாச கொடித்துவக்கு  இதனை வழிமொழிந்தார்.

இந்தக் குழு இன்று (21) பாராளுமன்றத்தில் கூடியிருந்ததுடன், குழுவின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார்.

அத்துடன், குழுவின் விடயதானத்துக்கு உட்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்துக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் குழு இணங்கியது.

இலங்கையில் வங்கித்தொழில், காப்புறுதி மற்றும் ஏனைய நிதித்துறை சேவைகளின் செயற்பாடுகள் தொடர்பில் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom