இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு தலைவர்கள் நியமனம்

திகதி : 2023-03-10

மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் நேற்று (மார்ச் 09) பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர்.

அதற்கமைய,  சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அகில எல்லாவல முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம்.எம். முஷாரப் வழிமொழிந்தார்.

அதேபோன்று, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பதிரன நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாதாச வழிமொழிந்தார்.

இதேவேளை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாளக பண்டார கோட்டேகொட நியமிக்கப்பட்டார். அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி லொக்குகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யதாமினி குணவர்தன அதனை வழிமொழிந்தார்.

மேலும், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தனித்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சஹன் பிரதீப் முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தம்மிக்க பெரேரா வழிமொழிந்தார்.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom