அமைச்சின் விசேட அனுமதியுடன் மாத்திரம் வயல் நிலங்களை நிரப்புவதற்கு கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் |
திகதி : | 2023-03-10 |
- விலங்கின நலம்பேணல் சட்டமூலம் தொடர்பில் மேலும் கலந்துரையாட இரண்டு வாரங்களில் குழு கூடும்
வயல் நிலங்களை நிரப்பும் செயற்பாடுகளை அமைச்சின் விசேட அனுமதியுடன் மாத்திரம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அண்மையில் (மார்ச் 07) உத்தரவிட்டார்.
வயல் நிலங்கள் நிரப்பப்படுவது குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோதே அமைச்சர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
மேலும், அடுத்த சிறு போகத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கும் தேவையான உரங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். இதன்படி அடுத்த பருவத்திற்கு மண் உரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் யூரியா 10,000 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையிலும், பொட்டாசியம் முரியேட்டு உரம் தற்போதைய விலையைவிடக் குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்துவது விவசாயிக்கு நன்மை பயக்கும் எனவும், விவசாயச் செலவுகளை முடிந்தவரை குறைக்க அரசாங்கம் தலையிடும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள விலங்கின நலம்பேணல் சட்டமூலம் தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது. சட்டத்தரணி திருமதி லாலனி எஸ் பெரேரா உட்பட குழுவுக்கு அழைக்கப்பட்டவர்கள் எஇந்தச் சட்டமூலத்தின் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்தனர். இந்த நாட்டில் விலங்குகள் நலனுக்காக நடைமுறையில் உள்ள சட்டம் மிகவும் பழமையானது, அது போதாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 1907 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விலங்குகள் துன்புறுத்துவதைத் தடுக்கும் சட்டமே தற்போது இலங்கையில் விலங்குகள் நலனுக்காக அமுலில் உள்ளதாகவும், புதிய சர்வதேச சட்டங்களின்படி புதிய விலங்கின நலம்பேணல் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
விலங்கினங்களின் நலன்பேணலுக்குப் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றாலும், விவசாய மற்றும் கலாசார நடவடிக்கைகளுக்கு விலங்குகளை பயன்படுத்துவதை இந்த சட்டங்கள் பாதிக்கக்கூடாது என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, இவ்விவகாரம் குறித்து மேலும் ஆழமாக விவாதித்த பிறகே இறுதிச் சட்டமூலம் தயாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். இதனால், இதுதொடர்பான எழுத்துப்பூர்வ கோரிக்கைகளை இரண்டு வாரங்களில் மீண்டும் அமைச்சு மட்டத்தில் சந்தித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ மொஹான் பிரியதர்ஷன்.த.சில்வா, கௌரவ டி.பி. ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.ஸ்ரீதரன், கௌரவ உதயகாந்த குணதிலக்க, கௌரவ குலசிங்கம் திலீபன், கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










