இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் முதல் தடவையாகக் கூடுகின்றன

திகதி : 2023-03-07

எட்டு துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் நாளை (மார்ச். 08) மற்றும் நாளை மறுதினம் (09) ஆகிய தினங்களில் முதல் தடவையாகக் கூடவுள்ளன.

இதற்கமைய இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் எட்டுக்குமான தலைவர்கள் முதலாவது கூட்டத்தில் நியமிக்கப்படவிருப்பதுடன், இதில் நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் ஆளும் கட்சியிலிருந்தும், நான்கு குழுக்களுக்கான தலைவர்கள் எதிர்க்கட்சியிலிருந்தும் நியமிக்கப்படவுள்ளன.

பதினேழு துறைசார் மேற்பார்வைக் குழுக்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் சபையில் அறிவித்திருந்ததுடன், இதில்  கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எட்டுக் குழுக்களே நளை மற்றும் நாளை மறுதினம் கூடவுள்ளன.

1) மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வை  குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
2)    நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வை  குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
3)    பாதுகாப்பு  பற்றிய துறைசார் மேற்பார்வை  குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
4)    சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
5)    சர்வதேச  தொடர்புகள்  பற்றிய துறைசார் மேற்பார்வை  குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 11)
6)    பொருட்கள் மற்றும் சேவைகள்  ஏற்றுமதியை அதிகரித்தல்  பற்றிய துறைசார் மேற்பார்வை  குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 12)
7)    பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை  குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 09)
8)    வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வை  குழு (உறுப்பினர்கள் எண்ணிக்கை 11)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom