இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கோபா குழுவின் புதிய தலைவராக கௌரவ லசந்த அழகியவண்ண மேலதிக வாக்குகளால் தெரிவு

திகதி : 2023-02-24

பாராளுமன்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் இன்று (பெப். 24) இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது, கௌரவ லசந்த அழகியவண்ணவின் பெயரை இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர முன்மொழிந்ததுடன், இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் வழிமொழிந்தார்.

அத்துடன், கோபா குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹஷீமின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அசோக் அபேசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனோ கணேசன் வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கௌரவ லசந்த அழகியவண்ணவுக்கு 14 வாக்குகளும், கௌரவ கபீர் ஹஷீமுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.

2004 முதல் பல குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி தனக்கு பரந்த அனுபவம் உள்ளதாகவும், இந்தக் குழுவில் கட்சி பேதமின்றி சுயாதீனமாக நாட்டுக்காக மேற்கொள்ளவேண்டிய கடமைகளை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அதற்காக குழு உறுப்பினரகள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் புதிய தலைவர் குறிப்பிட்டார்.   

அதேபோன்று, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு பாராளுமன்ற வரலாற்றில் பழைமையான குழுவாக 2023 ஒக்டோபர் அளவில் 100 வருடங்களை பூர்த்தி செய்வதாக தலைவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நிதிக் கட்டுப்பாடு காணப்படும் பாராளுமன்றத்தினால் வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றியதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றம் சார்பில் கண்காணிப்பை மேற்கொள்வது அரசாங்க கணக்குகள் பற்றிய குழு என்பதால் பாராளுமன்ற சபைக்கு காணப்படும் பொறுப்புக்களுக்கு சமமான பொறுப்புக்கள் இந்தக் குழுவுக்கும் காணப்படுவதாக அழகியவண்ண மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ காதர் மஸ்தான், கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ டயனா கமகே, கௌரவ சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.பி. திசாநாயக்க, கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ ஏ.எல்.எம். அதாஉல்லா, கௌரவ கபீர் ஹஷீம், கௌரவ மனோ கணேசன், கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ ஜே.சி. அளவதுவள, கௌரவ வடிவேல் சுரேஷ், கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ  ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ இசுறு தொடங்கொட, கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ டி. வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 4

5 8

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom