இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் ரஞ்சித் பண்டார பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு

திகதி : 2023-02-23

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல்தடவையாக இன்றையதினம் (பெப். 23) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டாரவின் பெயரை இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஜகத் புஷ்பகுமார முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், கோப் குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரான் விக்ரமரத்னவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நளின் பண்டார முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவூப் ஹக்கீம்  இதனை வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டாராவுக்கு 17 வாக்குகளும், கௌரவ இரான் விக்ரமரத்னவுக்கு 06 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.

குழுவின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக புதிய தலைவர் குழுவில் தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட முன்னர் மேற்கொள்ளப்பட்ட குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்ததுடன், குழுவின் உறுப்பினர்கள் இதற்கு இணங்கினர். கோப் குழுவின் பரிந்துரைகளுக்குக் காணப்படும் சட்டபூர்வமான பிணைப்புக்கள் தொடர்பான செயன்முறைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றி கௌரவ சபாநாயகர் மற்றும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ இந்திக அநுராத ஹேரத், கௌரவ டி.வி.சானக, கௌரவ ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ இரான் விக்ரமநாயக, கௌரவ நிமல் லன்சா, கௌரவ எஸ்.எம்.எம்.முஷாரப், கௌரவ நளின் பண்டார ஜயமகா, கௌரவ சமிந்த விஜயசிறி, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிப்பிட்டிய, கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம், கௌரவ ரஜிகா விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

12

34

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom