வழிவகைகள் பற்றிய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம் |
திகதி : | 2023-02-21 |
பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (பெப். 21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 124 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு அமைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, கௌரவ ரன்ஜித் சியம்பலாபிட்டிய, கௌரவ லஸந்த அழகியவன்ன, கௌரவ சிசிர ஜயகொடி, கௌரச சஷீந்திர ராஜபக்ஷ, கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, கௌரவ டப்ளியூ.டி.ஜே. செனெவிரத்ன, கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, கௌரவ வாசுதேவ நாணாயக்கார, கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ எஸ்.எம்.எம். முஸ்ஸாரப், கௌரவ தருமலிங்கம் சித்தார்தன், கௌரவ இஷாக் ரஹுமான், கௌரவ ஹேஷா விதானகே, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட மற்றும் கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார ஆகியோர் வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






