இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

திகதி : 2023-02-21

பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட  பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (பெப். 21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 123 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  பிரேரணைக்கு அமைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அதற்கமைய, கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ரா தேவி வன்னிராஆரச்சி, கௌரவ ஹரின் பர்னாந்து, கௌரவ ஜீவன் தொண்டமான், கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ தாரக பாலசூரிய, கௌரவ சீ.பீ. ரத்னாயக்க, கௌரவ விமல் வீரவங்ச, கௌரவ நாமல் ராஜபக்ஷ, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, கௌரவ ஜே.சீ. அலவத்துவல, கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ அகில எல்லாவல மற்றும் கௌரவ வருண லியனகே ஆகியோர் பொருளாதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom