இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நாட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பங்களிப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பாராளுமன்ற விசேட குழுவில் கவனம்

திகதி : 2023-02-17

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பங்களிப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு ஆராய்ந்தது.

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே தலைமையில் அண்மையில் (பெப். 15) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, நிதி அமைச்சு, நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்த விசேட குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் கொழும்பு துறைமுக நகருக்கு அருகாமையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்குத் தேவையான சட்டப் பிரிவான பிணக்குத் தீர்த்தல் நிலையத்தை அமைப்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், விசேட அழைப்பின் பேரில் குழுவுக்கு வருகை தந்திருந்த நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷவும் இதில் கலந்துகொண்டிருந்தார். குறித்த பிணக்குத் தீர்த்தல் நிலையத்தை அமைப்பது குறித்த தற்போதைய நிலைமைகள் மற்றும் அதனை விரைவுபடுத்துவது குறித்து அமைச்சரும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் அதிகாரிகளும் கலந்துரையாடினர்.

இதில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ மொஹமட் முஸம்மில் மற்றும் கௌரவ லலித் வர்ணகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom