இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உப குழுவின் இரண்டாவது அறிக்கை தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது

திகதி : 2023-02-10

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவின் இரண்டாவது அறிக்கை தொடர்பில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள்,  இளைஞர் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கான தெளிவுபடுத்தல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (பெப். 09) கூடியபோதே இவ்வாறு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்த அறிக்கையில் உள்ள விடயங்களை விபரித்தார். அதேபோன்று இந்த விடயங்கள் மற்றும் வேறு விடயங்கள் தொடர்பில் குழுவுக்கு அறிவுறுத்துவதற்கு தேவை எனின் அதனை பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

அதேபோன்று இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மேலும், வருகை தந்தவர்கள் இது தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டதுடன் அதற்கமைய, குறைந்த வருமானமீட்டுபவர்களை வலுவூட்டுதல், சமுர்த்தியை முறையாக வழங்குதல், கஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவை வழங்குதல், பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரித்தல், மாற உற்பத்திகளை விருத்தி செய்தல், விமான சேவைத்துறை மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான உப குழுவின் இரண்டாவது அறிக்கை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பயன்படுத்துமாறும் உபகுழுவின் தலைவர் அழைப்பு விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom