ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் கல்வி அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது |
திகதி : | 2022-03-11 |
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் கல்வி அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் கல்வியியல் கல்லூரிகளின் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது மற்றும் பயிற்சிக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. விஞ்ஞான பீடத்தின் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் தரத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் சில அம்சங்கள் குறித்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர். தோட்டப் பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லாமை குறித்த விடயமும் இங்கு கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ. விஜித பேருகொட, கலாநிதி சீதா ஆரம்பேபொல, கௌரவ. லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ. ஜயந்த கெடகொட, கௌரவ. சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ. அனுப பஸ்குவல், கௌரவ. யாதாமினி குணவர்தன, கௌரவ. ரோஹினி குமாரி விஜேரத்ன, கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், கௌரவ. முதிதா பிரிஷாந்தி சொய்சா உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









