இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2012-02-08

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2009ஆம் ஆண்டுக்கான தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் ஆண்டறிக்கை
(ii) 2010ஆம் ஆண்டுக்கான சனாதிபதி நிதியம் பற்றிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை
(iii) 2009ஆம் ஆண்டுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2010ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v) 2009ஆம் ஆண்டுக்கான செலசினெ தொலைக்காட்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(vi) (203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 237ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் (2011.10.05ஆந் திகதிய 1726/12ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)
(vii) 2009-2010ஆம் ஆண்டுக்கான லங்கா பொசுபேட் லிமிடெட்டின் ஆண்டறிக்கை


2012 ஜனவரி மாதம் 18ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் பிரேரிக்கப்பட்ட சிறப்புரிமை விடயத்தினின்றும் எழுந்த விடயம், கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


கெளரவ பைஸால் காசிம் அவர்களுக்கு "செய்யது சேஹுகோயா தங்கள் மெளலானா மன்ற (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம அவர்களுக்கு "பிலிப் குணவர்தன ஞாபகார்த்த சங்க (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"இலங்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நிலைமை ஏற்படுத்தும் தாக்கங்கள்" மீதான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அஜித் பி பெரேரா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றம் 2012 பெப்ரவரி 09ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom